என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ரெயில் மூலம் விழுப்புரம் வந்த 4 ஆயிரம் டன் உரம்

    முண்டியம் பாக்கத்தில் இருந்து லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட வேளாண் இயக்குனர் ரமணன் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நெல் 7 ஆயிரம் எக்டர், எள் 1,000 எக்டர், கரும்பு 13,500 எக்டேர் மற்றும் இதர பயிர்கள் 500 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. இதற்கு தேவையான உரங்கள் 4 ஆயிரம் டன், உர உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு அவை சரக்கு ரெயில் மூலம் விழுப்புரம் முண்டியம் பாக்கத்தில் வந்திறங்கியது.

    பின்னர் முண்டியம் பாக்கத்தில் இருந்து லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாக்ட் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 1,324 டன் காம்ப்ளக்ஸ் உரத்தில், 874 டன் உரம் விழுப்புரம் மாவட்டத்திற்கு சப்ளை செய்யப்பட்டது.

    ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட உரத்தில் யூரியா 215 டன், டி.ஏ.பி. 100 டன், காம்ப்ளக்ஸ் 120 டன், சூப்பர் 40 டன் விழுப்புரம் மாவட்டத்திற்கு சப்ளை செய்யப்பட்டது. எம்.எப்.எல். நிறுவனத் திடமிருந்து பெறப்பட்ட 1,303 டன் யூரியாவில் விழுப்புரம் மாவட்ட ஒதுக்கீடாக 715 டன் பெறப்பட்டது.

    உரம் வாங்குவதற்கு கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களை அணுகும் விவசாயிகள் தவறாமல் தங்களின் ஆதார் எண்ணை கொண்டு சாகுபடிக்கு தேவையான உரங்களை பெற்றுக் கொண்டு பி.ஓ.எஸ். கருவி மூலம் உரிய ரசீதுகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இந்த உரங்களை கொண்டு விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், எள், கரும்பு மற்றும் இதர பயிர் களுக்கு தேவையான அளவு மட்டும் மேலுரமிட்டு பயன் படுத்தலாம். இந்த தகவலை விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×