என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டம்
ரேசன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டம்
தரமற்ற பொருட்கள் வழங்குவதாக கூறி ரேசன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அக்கரைகோரி பகுதியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்கி சென்று வந்தனர்.
இந்த நிலையில் இந்த ரேசன் கடையில் வழங்கக்கூடிய பொருட்கள் எடை குறைவாகவும், தரமற்ற பொருட்களாக இருப்பதாகவும் பலருக்கு பொருட்கள் வழங்காமல் காலதாமதம் படுத்துவதாகும் புகார் தெரிவித்தனர். மேலும் பொருட்கள் வழங்காமல் இருக்க வேண்டி அங்குள்ள ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், கடும் குற்றச்சாட்டு வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை ரேசன் கடை முன்பு ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் ரேசன் கடையை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்போது இது சம்பந்தமாக மேலதிகாரியிடம் தெரிவித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






