என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்
கடலூரில் இன்று அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கடலூர்:
தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செலவை திரும்ப பெற அளிக்கப்பட்ட மனுக்கள் , மாவட்ட மாநில அரசு கமிட்டிகளில் 20,000 க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள். வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7,850 வழங்கிட வேண்டும் .
01.04.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட அனைவரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் . 01.01.22 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடன் வழங்கவேண்டும் . உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. வட்டத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். வட்ட இணைச் செயலாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.
வட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மாவட்ட துணை தலைவர் நடராஜன், மாவட்ட தலை வர் காசிநாதன், மாவட்ட இணைச் செயலாளர் பச்சையப்பன், மாவட்ட துணைத்தலைவர் ஆதவன், அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க மாநில தலைவர் அனுசுயா, மாவட்ட இணைச்செய லாளர் சுந்தரராஜன், வட்டத் தலைவர் சிவபிரகாசம், மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாவாடை உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். முடிவில் மாநில செயலாளர் மனோகரன் நிறைவுரை ஆற்றினார். வட்டார பொருளாளர் குலசேகர மணவாள ராமானுஜம் நனறி கூறினார்.
Next Story






