என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்
தமிழக ரெயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
கிடப்பில் இருக்கும் ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தக் கோரி விழுப்புரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்:
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை பெருக்கும் நோக்கத்துடன் பா.ம.க. வை சேர்ந்த அரங்கவேலு மத்திய ரெயில்வே இணை மந்திரியாக பொறுப்பு வகித்தபோது அறிவிக்கப்பட்ட திண்டிவனம்- நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை, சென்னை-மாமல்லபுரம், கடலூர், அத்திப்பட்டு புத்தூர், ஈரோடு பழனி, தர்மபுரி மொரப்பூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி, மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ஆகிய 8 ரெயில்வே பாதை திட்டங்கள் 13 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்தும், இந்த திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என வலி யுறுத்தியும் இத்திட்டங் கள் செயல்படுத்தப் படும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று அந்தந்த ரெயில் நிலையங்கள் முன்பு பாட் டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பா.ம.க. சார்பில், ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பால சக்தி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றார். மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் தங்கஜோதி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், கனல்பெருமாள், பழனிவேல், சங்கர், முன்னாள் மாவட்ட தலைவர் சம்பத், நகர செயலாளர் பெருமாள், விழுப்புரம் நகரமன்ற கவுன்சிலர் இளந்திரையன், கோலியனூர் ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின், சந்தோஷ் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் பாவாடைராயன் நன்றி கூறினார்.
Next Story






