என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலம் கட்டும் பணி
பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரம்
நீடாமங்கலம் அருகே பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:
திருச்சியில் இருந்து நாகை வரையிலான 4 வழிச்சாலை திட்டம் முதலில் தஞ்சை வரை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தஞ்சையில் இருந்து நாகை வரையிலான 4 வழிச்சாலை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
போதுமான நிதி இல்லாத காரணத்தால் 4 வழிச்சாலைக்கு பதிலாக இருவழிச்சாலை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனிடையே சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் மற்ற உபகரணங்கள் விலை ஏற்றத்தால் பணி கிடப்பில் போடப்பட்டது.
3 ஆண்டுகளுக்கும் மேல் தொடங்காமல் இருந்த இந்த சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீடாமங்கலம் அருகே பன்னிமங்கலம்,- குருவாடி இடையே பெரிய வெண்ணாற்றில் இரு வழிச்சாலைக்காக பாலம் கட்டும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.
இந்த சாலை பணி விரைவில் முழுமையாக நிறைவடைந்தால் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க முடியும். குறிப்பாக கனரக வாகனங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள், கார்கள், வேன்கள் நேரடியாக இந்த சாலையில் பயணிப்பதன் மூலம் பயண நேரமும் குறையும் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
Next Story






