என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம்:
ராம நவமி பேரணிகளின் போது குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்களின் போது நடத்தப்பட்ட
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் நாடு தழுவிய முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களுக்கான இந்துத்-துவா அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
ஹரித்வாரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இந்துத்துவ நிகழ்ச்சிகளில் இனப்படுகொலைக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தேசம்
முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடந்தை நகர தலைவர் முஹம்மது சரீஸ்
தலைமை வகித்தார். இதில் ஜாசர் அஹமத், மாவட்ட தலைவர் ரியாஸ் அஹமத், மாவட்ட பொதுச்செயலாளர் குடந்தை இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாநில செயற்குழு உறுப்பினர்
ஹாபில் ஆதம் மாலிக் ரஹ்மானி, மாவட்ட பொறுப் புக்குழு உறுப்பினர் த.மு.மு.க குடந்தை ஜாபர் ஆஷிக் அலி, மாவட்ட செயலாளர்சாஜிதா, தஞ்சை கிழக்கு மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம் மாவட்ட
செயலாளர் நஸ்ரின் பர்வின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் குலாம் உசேன், மாவட்ட தலைவர் பாப்புலர் ப்ரண்ட் தஸ்லிமா மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் தேசிய செயற்குழு
உறுப்பினர் முஹம்மது ஹாலித் மாவட்ட செயலாளர் பாப்புலர் ப்ரண்ட் உள்ளிட்ட நிர்வா-கிகள் கணடன உரையாற்றினர். இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி
நிர்வாகிகள், பொதுமக்கள் என நூற்றுக்-கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Next Story






