என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் ஒரே நாளில் 128.10 மி.மீட்டர் மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி

    கோவையில் சில வாரங்களுக்கு முன்பு கோடை வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது
    கோவை: 

    கோவையில் சில வாரங்களுக்கு முன்பு கோடை வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. இதனால் தற்போது இதமான கால நிலை நிலவி வருகிறது.

    நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  கோவை நகரில் இடி மின்னலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. 

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:&

    அதிக பட்சமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழத்தில் 30, சின்னக்கல்லாறு 29, பொள்ளாச்சி 20, கோவை விமான நிலையம் 16.80, சூலூர் 15, பெரிய நாயக்கன் பாளையம் 5.10, அன்னூர் 4.20, கோவை தெற்கு, சின்கோனா தலா 4 என மழை பதிவாகி இருந்தது. 

    மொத்தமாக நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 128.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.  தொடர் கோடை மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்தனர். 
    Next Story
    ×