என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
தூசி அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை கோவிலில் வீச்சு
தூசி அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை கோவிலில் வீசி சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அனுமந்த பேட்டை பகுதியில் தூசி போலீஸ் நிலையம் உள்ளது. இதன் எதிரில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது.
அந்தக் கோவிலில் இன்று அதிகாலை சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அருகே சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது.
இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பிறந்து 10 நாட்களே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






