என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பணி குழு ஆலேசனை கூட்டம்.
    X
    திருப்பணி குழு ஆலேசனை கூட்டம்.

    கோவிலில் திருப்பணி கமிட்டி அமைப்பு

    பசுபதிகோவில் கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோவிலில் குடமுழுக்கு நடத்த திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் பசுபதிகோவிலில் அமைந்துள்ள கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோவிலில் திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. 

    கூட்டத்தில் கரும்பாயிரம் கொண்ட அய்யனாரை குலதெய்வமாக கொண்டுள்ள குடும்பத்தினர் சுமார் 42 பேர் கலந்து கொண்டனர். அதில் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவில் புனரமைப்பு மேற்கொள்வது. அதற்காக திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டு அக்குழு திருப்பணி கமிட்டி மற்றும் நிதிக் கமிட்டி என 2 குழுக்கள் அமைக்கப்பட்டன.
     
    திருப்பணி கமிட்டியில் த.ராஜப்பா, ஆர்.ராஜசேகரன், ஜே.கிருஷ்ண மோகன், எம்.சரவணபவன், வி.வைரவேல், ஆர்.குணசேகரன், பி.மயில்ராவணன், ரமேஷ், ஆர்.சங்க, சந்திரமோகன் 

    ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.நிதிக் கமிட்டியில் ஆர்.ராஜசேகரன், ஜே. கிருஷ்ணமோகன், எஸ்.எம்.சந்திரமோகன் ஆகியோர் கோவில் திருப்-பணிகள் மேற்கொள்வதற்காக ஒருமனதாக 

    தேர்ந்தெடுக்க பட்டனர்.கருவறை கோபுரம், மகா மண்டபம் சீர் செய்தல், வர்ணம் பூசுதல், கருப்புசாமி  மற்றும் கருப்பு சாமி கோவில் மண்டபம் புதிதாக அமைத்-தல், கோவிலில் இடம்பெற்றுள்ள

    யானை, குதிரைகள் பழுது பார்க்கப்பட்டு வர்ணம் பூசுதல், சமையலறை அதனுடன் கூடிய உணவுக்கூடம் அமைத்தல், அய்யனார் கோவிலுக்கும் கருப்புசாமி கோவிலுக்கும் இடைப்பட்ட தூரத்தில்

    நடைபாதையின் மேற்கூரை அமைத்தல் (செட்), குடிநீர் வசதி, லெட்டின்கள்,  பாத்ரூம்  புதிதாக அமைத்தல், நுழைவுவாயிலில் பெயர் பலகை அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல்  கலசம்

    புதிதாக நிறுவுதல்  போன்ற திருப்பணி வேலைகளை மேற்கொள்வது.இதற்காக இந்து சமய அறநிலையத்துறையை அணுகி திருப்பணிக்கு உதவிடுமாறு கோருதல் மற்றும்  அனைவரும் திருப்பணிக்கு

    நன்கொடை மூலம் திருப்பணிகள் மேற்கொள்வதுஎன்று தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது.கூட்டத்தில் திருப்பணிக்காக சுமார் 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.  திருப்பணி

    கூட்டத்தில் வங்கி கணக்கு ஒன்றை துவங்கிட வந்திருந்தவர்களால் இன்றே சிறு தொகையும் வழங்கப்பட்டது. புதிய வங்கி கணக்கில்  நன்கொடைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கி

    கணக்கு விரைவில் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும் என கூறப்பட்டது.

    Next Story
    ×