என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றிலைக்காரன்பள்ளம் கிராமத்தில் சூறைக்காற்றில் வீட்டின் கூரை சேதமாகி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    வெற்றிலைக்காரன்பள்ளம் கிராமத்தில் சூறைக்காற்றில் வீட்டின் கூரை சேதமாகி கிடப்பதை படத்தில் காணலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் இடியுடன் கனமழை வீடுகள் மின்கம்பங்கள் சேதம்

    தருமபுரி மாவட்டத்தில் இடியுடன் கனமழை பெய்ததால் வீடுகள் மின்கம் பங்கள் சேதமானது.
    தருமபுரி,

    கோடை காலம் தொடங்கி யுள்ள நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி பரவலாக 20 க்கும் மேற்பட்ட மாவட் டங்களில் மழை பெய்து வருகிறது.
      தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக ஒரு சில இடங் களில் கனமழை பெய்து வந்தது. 

    இந்தநிலையில் நேற்று  தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வெப்பம் வீசி வந்த நிலையில், மாலை இருள் சூழ்ந்து 7 மணியில் இருந்து மழை பொழியத் தொடங்கியது. 
    இதில் தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, ஒகேனக்கல், பென் னாகரம், மாரண்ட அள்ளி போன்ற பகுதிகளில் ஆலங்கட்டி யுடன் கன மழை பொழிந்தது. 

    இதில் அதிகபட்சமாக தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, குடிப்பட்டி, பாலஜங்கமன அள்ளி, வெறிறிலைக்காரன்பள்ளம், அதகபாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன்  கனமழை பெய்தது. 

    இதனால் நல்லம்பள்ளி அதனை சுற்றி உள்ள கிராமங்களில் ஆலங் கட்டியுடன் சூறாவளி காற்று வீசியதால் மாட்டு கொட் டகை, வீட்டின் சிமெண்ட் சீட் மேற் கூரைகள், மின்கம்பங்கள் சூறாவளி காற்றால் தூக்கி   வீசப்பட்டு  சேதம டைந்துள்ளது மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து உள்ளது வெற்றிலைக் காரன் பள்ளத்தில் நேற்று பெய்த மழையால் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந் துள்ள தாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
    பாலக்கோடு 38.40
    தருமபுரி 10 
    மாரண்டஅள்ளி 22
    பென்னாகரம் 20
    ஒகேனக்கல்  12.40 
    அரூர்  2, 
    பாப்பிரெட்டிபட்டி 5.60

     தருமபுரி  மாவட்டத்தில் மொத்தம் 110.40 மி மீட்டர் மழை பதிவானது. சராசரியாக 15.77 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 
    மேலும் கடந்த 6 மாதங் களுக்கு பிறகு தற்போது தருமபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகளும், பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×