search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை
    X
    சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை

    கடலூர் சாவடி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

    சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் அதிக அளவில் குப்பைகளை பொதுமக்கள் வீசிச் செல்கின்றனர்.

    இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் கிடக்கின்றன. தமிழக அரசு பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சாலையோரத்தில் வீசப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் குப்பை அதிகளவில் இருப்பது வேதனை அளிக்கிறது.

    மேலும் இந்த குப்பைகளால் கொசு உற்பத்தியாகி சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே அதிகாரிகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×