search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக உட்கட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் விண்ணப்பம் விநியோகம்.
    X
    அதிமுக உட்கட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் விண்ணப்பம் விநியோகம்.

    திருவாரூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்

    திருவாரூரில் அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பேரூர் அதிமுக நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
     
    இதில் திருவாரூர் மாவட்டத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கட்சியின் அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்ளிட்ட தேர்தல் பொறுப்-பாளர்கள் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ வரவேற்றார். 

    இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா ராஜ-மாணிக்கம் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி தொடருமா என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டது.  ஆனாலும் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்று வெற்றிகரமாக 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடத்தியது. 

    எதிர்க்கட்சியாக இருக்க கூடிய இந்த காலத்தில் கட்சிக்குள் எப்போது பிரச்சனைகள் வரும் அதில் உள்ளே புகுந்து குட்டையை குழப்புவது போல் குழப்பி மீன் பிடிக்கலாம் என்று சிலர் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    அத்தகைய எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நாம் இடம் கொடுக்கக் கூடாது, கட்சியில் உள்ள பலருக்கும் பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் ஒரு பொறுப்பை ஒருவருக்கு மட்டுமே வழங்க முடியும்.

    எனவே பிரச்சினைகள் இல்லாமல் உங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு உட்கட்சி தேர்தலை சுமூகமாக நடத்த வேண்டும். 

    இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக பொறுப்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
    Next Story
    ×