search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    X
    அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 61.18 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்- கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

    இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவில் குறையும்.
    கோவை: 

    கோவை அரசு ஆஸ்பத்-திரியில் ‘ஹீமோபீலியா’ தின விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

    பின்னர் அவர் கோவை, வால்-பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.9 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி, திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.9 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்-திரியில் 6.89 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் தமிழகம் முழு-வதும் 32 அரசு ஆஸ்பத்திரி-களில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்-படுத்துவதற்காக ரூ. 87.97 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிகழ்ச்-சி-யில் பேசியதாவது:- ஹீமோபிலியா என்பதை நோய் என்று கருதக்கூடாது. இதனை நோய் என்று கருதினால் மனதில் பாதிப்பு ஏற்படும். ஹீமோபீலியாவில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பாதிக்கப்படும் போது லட்சக்கணக்கில் செலவாகும் நிலை இருந்தது. 

    இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையை கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கவனத்தோடும், மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

    ரத்தக்கசிவு ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு பெற்றுள்ளது. சென்னை முதல் இடத்திலும் அதற்கு அடுத்தபடியாக கோவை இந்த மருத்துவ வசதிகளையும் பெற்றுள்ளது. 

    மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கிருஷ்ண-கிரியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இத்திட்டத்தின் மூலம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 943 பேர் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை எட்டும். இந்த இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவில் குறையும். 

    இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 640 தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளது. இந்தத் திட்டத்தில் விபத்தினால் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிதி அளிக்கப்படும். 
    பின்னர் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நிதி உதவி செய்யப்படும். இந்தத் திட்டத்தால் கடந்த மூன்று மாதத்தில் விபத்தில் சிக்கி பயனடைந்தோரின் எண்ணிக்கை 46,949 பேர் ஆயிரம் பேர். 41 கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்கு அரசு செலவழித்துள்ளது. 

    இந்த இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர். 30, 40 சதவீத உயிரிழப்புகள் குறைந்து உள்ளது. விபத்தினால் பாதிக்கப்படு-பவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் செய்பவர்களுக்கு ரூ 5,000 ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 

    எனவே ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்கள் பயப்பட வேண்டாம். இந்த அரசு எப்பொழுதும் உங்க-ளுக்காக உறுதுணையாக இருக்கும். என்னுடைய முதல் இலக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்துவதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மாநகராட்சி சுகாதார குழுத்தலைவர் மாரிசெல்வன், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள்  பையா கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×