search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில்முக்கடல்சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி இன்று மாலை நடக்கிறது

    சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில்முக்கடல்சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி இன்று மாலை நடக்கிறது
    கன்னியாகுமரி, ஏப்.16-

    சித்ரா பௌர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்துதிருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியா குமரி கடற்கரையில்இன்று மாலை4.30மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    மாலை4.30 மணிக்கு பஜனையும் அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாட சாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில்உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதில் சுசீந்திரம் காசி திருப்பனந்தாள் திருமடத் தைச்சேர்ந்த தம்பையா ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது. 5.15 மணிக்கு பரசுராமர் விநாய கர் கோவிலில் பூஜை நடக்கிறது. 5-30மணிக்கு சித்திரகுப்தர் பூஜை மற்றும் சாதுக்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடக்கிறது. 

    5.30மணிக்கு சப்தகன் னிகள் பூஜை நடக்கிறது. பின்னர் நடக்கும் நிகழ்ச்சிக்கு வெள்ளிமலை விவே கானந்தா ஆசிரமதலைவர் சுவாமி சைதன்யானந்த ஜி மஹாராஜ் தலைமை தாங்கு கிறார்.

    குமரி மாவட்ட இந்து திருத் தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபா லன் பொதுச் செயலாளர் டாக்டர் சிவசுப்பிரமணிய பிள்ளை முன்னிலை வைக்கிறார்கள்.

    பேரூர் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேராதீனம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஸ்ரீமத் பரசமய கோளரி நாத் ஆதீனம் திருநெல்லை தென் மண்டல பொறுப்பாளர் 39-வது குருமகாசன் னிதானம் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்குகிறார். 

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தர்மராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். 

    6.30மணிக்கு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கி றது. 6 45 மணிக்கு சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல்அன்னைக்கு தீபம் காட்டுகிறார்கள். அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆதீனங்கள் சித்ரா பௌர்ணமி மகா சமுத்திர தீர்த்த ஆரத்திநிகழ்ச்சி யைகுத்துவிளக்குஏற்றி தொடங்கி வைக்கிறார்கள். 

    இறுதியாக இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. 

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர்எஸ். ராஜகோபால், பொதுச் செயலாளர் எஸ். சிவசுப்பிரமணிய பிள்ளை, பொருளாளர் செந்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் அனுசுயா செல்வி, எம். சந்திரன், எம். கோபி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×