என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நாடு முழுவதும் 4 ஆண்டுகளில் 7 கோடி மக்களுக்கு பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வு
இந்தியாவிலேயே முதல் முறையாக பாம்புக்-கடிக்கென காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை:
உலக அளவில் பாம்புக்-கடியால் ஆண்டுதோறும் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும், 5 லட்சம் பேர் நிரந்தர உடல் குறைபாடு அடைகின்றனர்.
பாம்புக்-கடியால் பாதிக்கப்படும் மக்கள் தங்கள் சொந்த செல-விலேயே சிகிச்சை மேற்-கொண்டு வரும் நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக பாம்புக்கடிக்கென காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் பேரா-சிரியரும், பாம்புக்கடி ஆராய்ச்சியாளருமான சக்திவேல் வையாபுரி கூறியதாவது:-&
நாங்கள் கடந்த 18 ஆண்டுகளாக பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாம்புக்கடி என்பது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்-களும் பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்சினையில் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.
இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நாடு முழுவதும் 7 கோடி மக்கள் மத்தியில் பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
முதல்&அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் பாம்புக்கடி சிகிச்சைக்கான காப்பீட்டு திட்ட இருந்தாலும், அதில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே இதில் பயனடைவார்கள். இந்தியாவில் எந்த காப்பீட்டு நிறுவனமும் பாம்புக்கடிக்கு பாலிசி கொண்டுவராத நிலையில் ஒரு தனியார் இன்சூரன்ஸ்ற நிறுவனம் இத்திட்டத்தை கொண்டுவந்து உள்ளது வரவேற்கிறோம். ஆண்டுக்கு ரூ.472 என்ற பிரீமியத்தில் இந்த காப்பீட்டைப் பெறலாம்.
இந்த காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் பாம்புக்கடிக்கு மட்டுமல்லாமல் பிற விபத்து சிகிச்சைகளையும் பெற முடியும். இது ஏழைகள், விவசாயிகளுக்கு உதவும் என்றார்.
Next Story






