search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவை விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

    தமிழகம் முழுவதும் விவசாயிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
    கோவை: 

    சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து-ரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. 

    இதில் தமிழகம் முழுவதும் விவசாயிகளுடன் தமிழக முதல்&அமைச்சர் காணொலி மூலம் கலந்துரையாடினார். முதல்&-அமைச்சர்  மு.க.-ஸ்டாலின் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த 23.9.21 அன்று தொடங்கி வைத்தார். 

    கடந்த 6 மாத காலத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்-பட்டுள்ளன.  இந்த திட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று முதல்&-அமைச்சர்  மு.க.-ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வருகை தந்து ஒரு லட்சமாவது விவசாய பயனாளிக்கு மின் இணைப்பு ஆணை வழங்கி விழாவுக்கு தலைமை தாங்கினார். பின்னர் பயன் அடைந்துள்ள விவசயிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி பேசினார்.

    கோவை மாவட்டத்தில் 5604 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும் சரவணம்பட்டி, ஈச்சனாரி, சூலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் கல்லூரிகளில் விவசாயிகள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 

    இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிசெல்வன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்.
    Next Story
    ×