என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில   செயலாளர் முத்தரசன் பங்கேற்ற காட்சி.
    X
    சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்ற காட்சி.

    இந்திய கம்யூனிஸ்ட்டு ஆர்ப்பாட்டம்

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவை சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார்.  

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, துணை செயலாளர்கள் கீதநாதன், அபிஷேகம்,  நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, சரளா, தனராமன், பொருளாளர் வ.சுப்பையா உள்பட கட்சியின்  நிர்வாகிகள், மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ஆர்ப்பாட்டத்தில்,  புதுவை பொறுப்பு கவர்னரை திரும்பப்பெற்று புதுவைக்கு  நிரந்தரமான கவர்னரை நியமிக்க வேண்டும். மாநிலத்துக்கு உரிய நிதி அதிகாரம், நிர்வாக அதிகாரம் கிடைக்க வேண்டும். மாநில அந்தஸ்து  வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    Next Story
    ×