
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சமீபத்தில் பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகனின் வீட்டில் இருந்து அவரது உறவினர்கள் மணப்பெண்ணை அழைப்பதற்காக அதிகாலையில் மேளதாளத்துடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது மணப்பெண் திடீரென மாயமானார். அவரது அறையில் சென்று பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.