என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெண்குடை திருவிழா.
    X
    வெண்குடை திருவிழா.

    வெண்குடை திருவிழா

    ராஜபாளையத்தில் வெண்குடை திருவிழா நடந்தது.
    ராஜபாளையம்

     விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேவேந்திரகுல வேளாளர்சமூகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல்தேதி வெண்குடை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 

    வரலாற்று சிறப்புமிக்க இந்தவிழா இந்தஆண்டு ராசபாளையம் செல்லம் வடக்குத் தெரு, தெற்குத் தெரு, சீனிவாசன் புதுத்தெரு, குமரன்தெரு உள்பட தெருக்கள் வழியாக கேரள செண்டை மேளம், உருமி மேளம், ஒயிலாட்டம், ஆலிஆட்டம், முழங்க வெண்குடைஏந்தி மருளாடி சாமியாடி வந்தார். 

     வெண் குடையை சுற்றிலும் ராஜபாளையம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முடங்கியாறு‌ ரோடு வழியாக வட்டாட்சியர் அலுவலகம், ராஜாக்கள் கல்லூரி அருகே உள்ள பகுதியில் முகாமிட்டனர். 

    மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு நீர்காத்த அய்யனார் கோவில் சென்று வழிபாடு நடத்தி மாலையில் வாணவேடிக்கைகள் முழங்க திரும்ப உள்ளனர்.
    Next Story
    ×