search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புலியகுளம் விநாயகர்
    X
    புலியகுளம் விநாயகர்

    தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்- கோவை கோவில்களில் பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு

    மருதமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டது.
    கோவை: 

    இன்று தமிழர்களின் பண்டிகையான தமிழ் புத்தாண்டு கொண்டாடப்-படுகிறது. இதனையொட்டி கோவையில் உள்ள கோவில்களில் காலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     
    கோவை மருதமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்-பட்டது. ஆதி மூலஸ்தா-னத்தில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை-பெற்றது.இதையடுத்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்பட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சுவாமி கனி காணும் நிகழ்ச்சியும் நடந்தது.பின்னர் சுவாமிக்கு காய்கனிகள் படைக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக தங்க மயில் வாகனத்தில் கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தமிழ் புத்தாண்டை யொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காலை முதலே மருதமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பஸ், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.
    பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகளவில் பக்தர்கள் திரண்டதால் மலையடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதையும் காண முடிந்தது. தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பாதுகாப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    புலியகுளம் விநாயகர் கோவிலில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, மாம்பழம், கொய்யா உள்பட பல்வேறு வகையான 2 டன் பழ வகைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதணை காட்டப்பட்டது. காலை முதலே பக்தர்கள் கோவி லுக்கு வந்து விநாயகரை தரிசித்து அருள் பெற்று சென்றனர்.

    ஈச்சனாரி விநாயகர் கோவிலும் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்-களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோனியம்மன் கோவிலில் இன்று அதிகாலையே நடை திறக்கப்-பட்டது. பக்தர்களும் காலையிலேயே கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு நடந்த அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்களை பார்த்து சாமி தரிசனம் செய்தனர். 

    இதேபோல் மாநகரில் உள்ள தண்டு மாரியம்மன், கருமாரியம்மன், புலியகுளம் மாரியம்மன், உக்கடம் நரசிம்மர் கோவில், பாப்பநாயக்கன் பாளையம் பெருமாள் கோவில், ராமர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.இதேபோல் புறநகர் பகுதி களான மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில், பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×