என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனால் காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனால் காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
தமிழ் புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
முன்னதாக பொதுமக்கள் தங்களது வீடுகளில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று காலை எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற கனிகள், தங்க நகைகள், ரூபாய் நோட்டுக்கள் ஆகியவற்றை ஒரு தட்டில் எடுத்து வந்து பூஜை அறை முன்பு வைத்து வழிபட்டனர்.
அந்த தட்டில் கண்ணா டியை வைத்து கண்ணாடி மூலமாக கனிகள், பணத்தை பார்த்தனர். இதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். பின்னர் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
கடந்த 2 வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபட்டனர். இந்த வருடம் பாதிப்பு குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதால் இன்று அதிகாலையிலேயே பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று கோவில்களில் வழிபட்டனர்.
ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோவில், ரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர், பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன், நடுமாரியம்மன், கொங்காலம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. சென்னிமலை முருகன் கோவில், ஈரோடு அடுத்துள்ள திண்டல் முருகன் கோவிலில் அதிகாலையில் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது.
இதேபோல பவானி சங்கமேஸ்வரர், கோபி பச்சமலை முருகன், பண்ணாரியம்மன், கொடுமுடி நட்டாற்றீஸ்வரர், ஈரோடு பார்க் ஆஞ்சநேயர் கோவில், ரெயில்வே காலனி சாய்பாபா கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடை பெற்றது. இதனால் இன்று கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கோபியில் தமிழ் புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோபி வேலுமணி நகரிலுள்ள சக்தி விநாயகர் கோவிலில் அதிகாலை பால், தயிர், இளநீர்,பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து சுவாமி அனைத்துவித பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்-களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு தீபாரா-தனைகள் நடைபெற்றன.
மேலும் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில், பவள மலை, பச்சைமலை முருகன் கோவில்கள், கோபி சாரதா மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஐயப்பன் கோவில், வரதராஜபெருமாள் கோவில், கோபி ஈஸ்வரன் கோவில், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெருந்துறையில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சோளீஸ்வரர் கோவில், பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் குன்னத்தூர் ரோடு பகுதியில் உள்ள செல்லா ண்டியம்மன் கோவில், அக்ரகாரம் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பொதுமக்கள் காலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபட்டு சென்றுள்ளனர். கோவில்களில் இன்று பிரசாதமாக கனிவகைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story






