என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
நெசவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
சத்தியமங்கலம் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நெசவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நெசவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி ரஞ்சிதா. இருவரும் நெசவுத்தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் ரவிக்குமார் வேலை விஷயமாக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று ரவிக்குமார் தனது மகளை சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு எம்.ஜி.ஆர் . நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் ரஞ்சிதாவின் தாய் மகளுக்கு போன் செய்து உனது கணவர் வீட்டின் உள்பக்கம் தாழிட்டு கதவை திறக்காமல் இருக்கிறார் என்றும், நீ உடனே கிளம்பி வா என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து ரஞ்சிதா தனது தாய் வீட்டிற்கு வேகமாக வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது ரவிக்குமார் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரவிக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






