என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குளியல் அறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    ஈரோட்டில் குளியல் அறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் குளியல் அறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த எடையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் என்கிற ராஜா (27).

    இவர் ஈரோடு மூலப் பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு பழமுதிர்ச் சோலையில் கடந்த 10 வருடமாக  வேலை பார்த்து வந்தார்.  ராஜா  அருகே ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாவின் பாட்டி இறந்து விட்டதால் அவர் கரூர் சென்றிருந்தார். 2 நாட்கள் ஈரோட்டில் தான் தங்கியிருந்த அறைக்கு வந்தார். அவரது அறையில் சக்திவேல், மூர்த்தி என 2 பேர் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில்2 பேரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் ராஜா மட்டும் அறையில் இருந்தார். பின்னர் சக்திவேல் ராஜாவிற்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தார்.

    அப்போது ராஜா அறையில் இல்லை. அவரை ஒவ்வொரு இடமாக தேடி பார்த்த போது வீட்டில் உள்ள குளியல் அறையில் ராஜா தூக்கு போட்டுக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து  தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜா எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×