என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆடிய காட்சி.
ஈரோடு மாவட்டத்தில் 32 தியேட்டர்களில் பீஸ்ட் படம் வெளியானது
ஈரோடு மாவட்டத்தில் 32 தியேட்டர்களில் பீஸ்ட் படம் வெளியானதை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 32 தியேட்டர்களில் பீஸ்ட் படம் வெளியானதை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இதையடுத்து பீஸ்ட் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆடிப்பாடி மேளதாளங்களுடன் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் விஜய் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 37 தியேட்டர்கள் உள்ளன. மாநகர் பகுதியில் மட்டும் 11 தியேட்டர்கள் உள்ளன.
இதில் மாநகர பகுதியில் 7 தியேட்டர்களிலும், கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் 25 தியேட்டர்கள் என மாவட்டம் முழுவதும் 32 தியேட்டர்களில் இன்று விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளி வெளியானது.
ரசிகர்களுக்கு என்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி அதிகாலை பீஸ்ட் படம் வெளியான தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினர். சில ரசிகர்கள் விஜய் கட்டவு ட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.
இன்னும் சில ரசிகர்கள் மேளதாளம் முழங்க திரையரங்கத்திற்கு வந்து நடனம் ஆடி, பாட்டு பாடி மகிழ்ந்தனர். தியேட்டருக்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். சில ரசிகர்கள் விஜய், பீஸ்ட் பட கெட்டப்பில் வந்திருந்தனர். இதனால் இன்று தியேட் டர்களில் விழாக்கோலம் பூண்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஸ்ட் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Next Story






