என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூக்குபோட்டு மெக்கானிக் தற்கொலை

    சித்தோட்டில் தூக்குபோட்டு மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    சித்தோட்டில் தூக்குபோட்டு மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). டையிங் மெஷின் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

    செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மாலதி கோபித்து கொண்டு தனது 2 மகள்களுடன் பருவாச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இதனால் மன வேதனையில் இருந்த செந்தில்குமார் குடிபோதையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    செந்தில்குமார் வீட்டிற்கு வந்த அவரது தம்பி ஜன்னல் வழியாக பார்க்கையில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
    Next Story
    ×