என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பிளஸ்-2 செய்முறை தேர்வுகள்
பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்வுக்கு குறுகிய காலமே இருந்ததால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. வழக்கமாக மார்ச்சில் நடைபெறும் பொதுத்தேர்வு மே மாதம் தள்ளி வைக்கப்பட்டது. வருகிற மே 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை பிளஸ்-2 தேர்வுகள் நடக்கிறது. பிளஸ்1 மாணவர்களுக்கு மே 10ந்தேதி தொடங்கி 31-ந்தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதியும் தேர்வுகள் முடிவடைகிறது.
இவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் 25ந்தேதி முதல் மே 2-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் 2 ஆண்டுக்கு பிறகு நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 7 ஆயிரத்து 660 மாணவிகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 647 பேர் பங்கேற்கின்றனர். இதில் 6 ஆயிரத்து 371 பேர் அரசு பள்ளி மாணவர்கள்.
பிளஸ்-1 பொதுத்தேர்வை 7 ஆயரத்து 831 மாணவிகள் உட்பட 15 ஆயிரத்து 174 பேரும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 64 மாணவர்கள் உட்பட 16 ஆயிரத்து 831 பேர் எழுத உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 2 ஆண்டாக ஆல் பாஸ் முறையில் தேர்ச்சி பெற்று வந்து, முதல் முறையாக பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
Next Story






