என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே விநாயகர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே விநாயகர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கந்தசாமிபுரம் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது.
இங்கு நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். பின்னர் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க அர்ச்சகர் வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கோவில் உண்டியல் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






