என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் நகர்மன்ற முதல் கூட்டம் தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா தலைமையில் நடந்தது.
சொத்துவரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு
ராஜபாளையத்தில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்மன்ற முதல்கூட்டம் தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது படங்கள் நகர்மன்ற கூட்ட அரங்கில் திறக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதர தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
18வது வார்டு அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் சோலைமலை எழுந்து, சொத்து வரி உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்டத்தை விட்டு வெளி நடப்பு செய்தார். பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று முடிவடைந்தது.
Next Story






