என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து காட்சி.
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி அறிவியல் கண்காட்சியில் 242 படைப்புகள்
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சியில் 242 படைப்புகளை காட்சி படுத்திய மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
வேலூர்:
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது. இதில் 242 படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை வைத்துள்ளனர்.
அவர்களுடைய சிந்தனைகள் செயல்திறனை காட்சிபடுத்தி உள்ளனர். ஒரு சில மாணவ. மாணவிகள் படைப்புகள் மிக அருமையாக இருந்தது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் படைப்புகளை பொதுமக்கள் மத்தியில் காட்சி படுத்தி அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்களும் வந்து பார்க்கலாம். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இதில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு 21 பேருக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






