என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம்
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவனா (வயது31). இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாவனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவனா உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story