search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்த காட்சி.
    X
    மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்த காட்சி.

    பெண்கள் முன்னேற்றம் குறித்து மினி மாரத்தான்

    பெண்கள் முன்னேற்றம் குறித்து மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    தொட்டியம் கொங்குநாடு கல்விநிறுவனம் சார்பாக பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நாமக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள நளா  ஹோட்டலிலிருந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையத்தின் மைதானம் வரை 8 கி¢மீ தூரம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமையில்,  . சிறப்புவிருந்தினராக பங்கேற்ற மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா கொடியசைத்து மினி மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

    இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி), கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கொங்குநாடு கல்வியியல் கல்லூரிகளைச்சார்ந்த மாணவ மாணவியர்கள்.

    ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பல்வேறு கல்லூரிகளைச்சார்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரியவர்கள். சிறியவர்கள் என ஆண்கள் பெண்கள் ஆகியோர் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    Next Story
    ×