search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
    X
    அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

    தி.மு.க. சார்பில் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

    தி.மு.க. சார்பில் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் உள்ளாட்சியில் பெருவெற்றியை தந்த பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது.

    பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான ராஜேந்தின் தலைமை வகித்தார்.

    பெரம்பலூர் எம்.எல்.ஏ.வும், நகர செயலாளருமான பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக மாநில சட்டத்துறை செயலாளர் கிரிராஜன்  கலந்து கொண்டு பேசுகையில், வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார் .

     மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். முதல்மைச்சரின் ஒவ்வொரு சிந்தனையிலும் செயலிலும் சுய மரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிட கொள்கைகள் நிறைந்திருக்கின்றன.

    மக்களின் தேவைகளை அறிந்து நல்ல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது எனவும், முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

     கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், சிவக்குமார், மாவட்ட அவைதலைவர் அ.நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர்,

    மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நல்லதம்பி, மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், சோமுமதியழகன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.

    Next Story
    ×