என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊக்கத்தொகை வழங்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?- நாடாளுமன்றத்தில் பொன்.கெளதமசிகாமணி கேள்வி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கெளதமசிகாமணி நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பேசும்போது, இந்தியாவில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் தேசிய எண்ணிக்கை 25 சதவீதமாக இருக்கிறது. ஆனால் இதில் தமிழ் நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் 52 சதவீதம் நபராக உள்ளனர். இந்த கூடுதல் சதவீதத்தால் மாநில கல்வி தொகையின் செலவுகள் கூடுதலாக உள்ளது.
இந்த கூடுதல் எண்ணிக்கையானது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என கேட்டார். இதற்கு பதிலளித்த கல்வித் துறையின் இணை அமைச்சர் அன்ன பூர்ணாதேவி அதற்கான நேரடியான பதில் அளிக்காமல் தற்போதைக்கு கற்றுதலை கைவிடுபவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் இருக்கின்றது, அதற்கே முன்னுரிமை தருகின்றோம் என்று பதில் அளித்தார்.






