என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் படுகாயம்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் படுகாயம் அடைந்தார்.
வேலூர்:
வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்தவர் தீபக் (வயது 15). இவர் விருபாட்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தீபக் நேற்று மாலை 5 மணிக்கு பள்ளி நேரம் முடிந்து, வீட்டுக்குச் செல்ல விருபாட்சிபுரத்தில் இருந்து வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வந்தார்.
பஸ் நிலையத்தில் பசுமாத்தூரில் இருந்து வந்த பஸ்சில், அவர் ஏற முயற்சி செய்தபோது நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய தீபக் படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் தீபக்கை மீட்டு ‘108’ ஆம் புலன்ஸ்சில் ஏற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






