என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஆரோக்கியா மாதா தேவாலயத்தில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்ற காட்சி.
வேலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
வேலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடைபெற்றது.
வேலூர்:
தவக்காலத்தையொட்டி கிறிஸ்தவர்கள் இன்று குருத்தோலை பவனி சென்றனர்.
வேலூர் விண்ணரசி தேவாலயம், சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம், ஓல்டு டவுன் ஆரோக்கிய மாதா ஆலயம், சத்துவாச்சாரி சூசையப்பர் ஆலயம், காட்பாடி நற்கருணை ஆண்டவர் ஆலயம், காந்திநகர் இருதய ஆண்டவர் ஆலயம், சேண்பாக்கம் சூசையப்பர் ஆலயம், பாகாயம் குழந்தை இயேசு போன்ற ஆலயங்களில் இன்று காலை 8 மணிக்கு குருத்தோலை பவனி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக பாடல்கள் பாடி கிறிஸ்தவர் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
வேலூர் அடுத்த சாய்நாதபுரம் அன்பு இல்லத்தில் குருத்தோலை பவனி சென்றனர்.
Next Story






