என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இருந்து மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்
குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் இன்று காலை நடந்தது.
ஈரோடு:
ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் இன்று காலை நடந்தது.
ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு, 40 நாட்கள் உபவாசம் இருந்துள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொள்வர்.
ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த விரதம் நிறைவு பெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொள்ள தொடங்கினர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்கள்.
அதன்படி ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் இன்று காலை நடந்தது.
இந்த ஊர்வலம் பன்னீர்செல்வம் பார்க் அருகில் தொடங்கி தேவால யத்தில் நிறை வடைந்தது.
இதேபோல், சி.எஸ்.ஐ சர்ச்சில் குருத்தோலை ஊர்வலம் ஆலயத்தில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சவிதா சந்திப்பு வரை சென்று மீண்டும் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக வந்து ஆலயத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இசை வாத்தியங்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடிய படி சென்றனர்.
இதையடுத்து வரும் 14-ந் தேதி பெரிய வியாழனும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான 15-ந் தேதி புனித வெள்ளியும், ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான 17-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
இதேபோல் அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு இடங்களிலும் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
Next Story






