என் மலர்
உள்ளூர் செய்திகள்

முருகன்புதூர் பகுதியில் உள்ள நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை பள்ளி கட்டிடத
கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அந்தியூர். ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத் தின் கீழ் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், ரூ.45.65 லட்சம் மதிப்பீட்டில் 12 பணிகளும், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் 16 பணிகளும், ரூ.38.55 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும் என மொத்தம் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் 34 பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட் பட்ட முருகன் புதூர் பகுதியில் உள்ள நக ராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்விநிதித்திட்டத்தின் கீழ் ரூ.20 லட் சம் மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள கூடுதல் வகுப்பறை பள்ளி கட்டிடத்தினையும், கமலா ரைஸ் மில் வீதியில் 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் மூலம் தண்ணீர் வழங்கும் சேவையினையும் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, கோபிசெட்டிபாளையம் நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், கோபி தாசில்தார் தியாகராஜன், கோபி நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






