search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லிசேபிரான்சே பள்ளியில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வாக்குபதிவில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்தனர்
    X
    லிசேபிரான்சே பள்ளியில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வாக்குபதிவில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்தனர்

    பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்- புதுவையில் ஓட்டுப்பதிவு

    புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடந்தது.

    தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரெஞ்சு தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

    புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை ஓட்டளிக்கலாம். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தனர்.

    வாக்குபதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×