என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீர்-மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
நீர் மோர் பந்தல்
விருதுநகரில் 5 இடங்களில் நீர், மோர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனிபொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் 5இடங்களில் நேற்றுகாலை நீர், மோர்பந்தல் திறக்கப்பட்டது.
விருதுநகர் மேற்குமாவட்ட அ.தி.மு-க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி நீர்,மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தண்ணீர்பழம் மற்றும் இயற்கை பானங்களை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என். பாபுராஜ், சிவகாசி நகரசெயலாளர் அசன் பதூருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை 3வது வட்ட செயலாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் செய்திருந்தனர்.
Next Story






