என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் கவுதம் பேசிய காட்சி
புதிய கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் மனு
புதிய கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரத்தில் புதியதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுபாவா பள்ளிவாசல், மெய்யபுரம், பழந்தினாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அறிந்த தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன் மெய்யபுரத்துக்கு வந்து கல்குவாரியைப் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மலைகளை அழித்து விட்டால் மழை பெய்யாமல் பூமி வடு விடும். கனிமவளக் கொள்ளை அரசாங்கத்தின் ஆதரவுடன் தாண்டவமாடுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே ஆயிரக்கணக்கான மரணப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டமும் கனிம வளக் கொள்ளையில் முதன்மை மாவட்டமாகத் திகழ்கிறது. மக்கள் போராட்டங்களையும் மீறி இங்கு கல்குவாரி செயல்பட அனுமதித்தால் மக்களை காப்பாற்றப் போராடுவேன் என்றார்.
Next Story






