என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
அதிகாரிகள் 2 பேர் மீது வழக்கு
மின் ஊழியர் பலியான சம்பவத்தில் அதிகாரிகள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே சிப்காட் பகுதியில் மின்வாரிய லைன்--மேனாக பணிபுரிந்து வந்தவர் ஜெய்சங்கர் (வயது55). மூன்று தினங்களுக்கு முன்னர் மின்பழுது காரணமாக பணியிலிருந்த-போது மின்-சாரம் தாக்கி தீப்-பிடித்ததில் பலத்த காயமடைந்த
ஜெய்சங்கர் புதுக்-கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ-மனையில் சிகிக்சைக்காக சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி பரிதா-பமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜெய்சங்கர் மனைவி பார்வதி (42) கொடுத்த புகாரின்பேரில் கவன-குறைவாக பணி-யாற்றிய மீட்டர் மற்றும் ரிளே டெஸ்ட் உதவி பொறியாளர் வேலாயுதம், சிப்காட் துணை மின்-நிலையம் பரா-மரிப்பாளர் உதவி பொறியாளர் ரகுநாதன் மீது வெள்ளனூர் காவல் நிலைய போலீசார் 304&ஏ பிரிவின்-கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ஊழியர் இறந்ததற்கு அதிகாரிகள் மீது வழக்கு-பதிவு செய்வது இதுவே முதன்-முறையாக உள்ளது என மின்வாரியம் வட்டாரத்தில் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பர-பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






