என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
மெக்கானிக் மர்மச்சாவு
மெக்கானிக் மர்மச்சாவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 40). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஆலங்குடி சந்தைபேட்டை அருகில் உள்ள சித்தி வினாயகர் கோவில் தென்குளக்கரையில் அவர் பிணமாக கிடந்தார். அவரது சாவிலும் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாகவும் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






