என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

    பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் பங்கு பெற்று பயன் அடையலாம்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை-பயிற்சிப் பிரிவின் சார்பாக எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வருகிற 21-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் பங்கு பெற்று பயன் அடையலாம்.

    மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 044-29894560 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×