என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பெண் போலீசார்.
    X
    ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பெண் போலீசார்.

    போலீஸ் நிலையங்களில் தூய்மை பணி செய்த போலீசார்

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 41 போலீஸ் நிலையங்களில் இன்று தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 41 போலீஸ் நிலையங்களில் இன்று தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை தமிழக காவல்துறையினர் தூய்மை தினமாக கடைப்பிடிக்க வேண்டும்.

    மேலும் காவல்துறையின் கட்டிட அலுவலகங்கள், நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் அதை சார்ந்த இடங்களையும் தூய்மைப்படுத்தம் பணியை செய்ய வேண்டும். 

    இதை கண்காணிக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இதை சரியாக நடைபெறுகிறதா? என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் திடீர் என்று ஆய்வு செய்ய வேண்டும். 

    இந்த பூமி பணிகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார், அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தூய்மை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு டவுன் சப்&டிவி-சனில் டவுன், கருங்கல்-பாளையம், சூரம்பட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா, வீரப்பன்சத்திரம், ஈரோடு மகளிர் போலீசார் ஆகிய போலீஸ் நிலையங்களும்,

     பெருந்துறை, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் மாவட்டம் முழுவதும் 41  போலீஸ் நிலையங்களும், போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் கட்டிடங்களில் இன்று தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.  

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் நேரடிப் பார்வையில் சுத்தப்படுத்தப்பட்டது. இதேபோல் போலீஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதியும்  தூய்மைப்படுத்தப்பட்டன.

    கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி முன்னிலையில் சுத்தப்படுத்தப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு லாரியில் ஏற்றி செல்லப்பட்டன.

    இதேபோல் சிறுவளூர், கடத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. 

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.
    Next Story
    ×