search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக அமைக்கப்பட்ட சேஷாத்ரி சுவாமிகள் பீடத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
    X
    புதிதாக அமைக்கப்பட்ட சேஷாத்ரி சுவாமிகள் பீடத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.

    திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்ட சேஷாத்ரி சுவாமிகள் பீடத்தில் கும்பாபிஷேகம்

    திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்ட சேஷாத்ரி சுவாமிகள் பீடத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயிலின் பின்புறத்தில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் சித்தர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. 

    இங்கு ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளுக்கு மட்டுமன்றி ஸ்ரீமீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் சிலை அமைய பெற்றுள்ளது. முக்கியமாக ஸ்ரீராதாகிருஷ்ணன், ஸ்ரீகுபேர பெருமாள்,ஸ்ரீபழனி முருகர் ஆகியோரின் நவபாஷாண மூலிகைகளான சிலைகளும் அமைய பெற்றுள்ளது.

    இந்த சித்தர் பீடத்தின் கும்பாபிஷேகம் நேற்று காலை விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின.

    சுமங்கலி பூஜை, கோ-பூஜையை தொடர்ந்து முதல்கால பூஜைகள் நடந்தன.

    நேற்று 2-ம் கால பூஜைகள் நடைபெற்றன. காலை 11-30 மணிக்கு எரும்பூர் கர்ணன் சித்தர் முன்னிலையில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் சித்தர் பீடத்தின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

    தொடர்ந்து ஸ்ரீமீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர், நவபாஷணங்களான ஸ்ரீராதாகிருஷ்ணன், ஸ்ரீகுபேர பெருமாள்,ஸ்ரீபழனி முருகர் ஆகிய சிலைகள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டது.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பிறகு எரும்பூர் கர்ணன் சித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×