என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் மற்றும் மரம் நடும் விழா நடைப்பெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் மற்றும் மரம் நடும் விழா
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் மற்றும் மரம் நடும் விழா நடைப்பெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் மற்றும் மரம் நடும் விழா நடைப்பெற்றது. விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். பொன்.சரவணன் தலைமை வகித்தார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1&ந்தேதி முதல் 30&ந்தேதி வரை தமிழக அரசின் மருத்துவமனை தூய்மை இயக்கம் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்று பெரும் முன்னெடுப்பாக தங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் நமது ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல் படுத்தப்படுகிறது.
முன்னதாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிர்வேலு மற்றும் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் நிவின்பிரகாஷ், குணசீலி மற்றும் வேலுசாமி வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் டாக்டர்ஸ் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரி மாணவிகள், ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக கதிரேசன் அனைவரையும் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் கோபால் நன்றி கூறினார்.
Next Story






