என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த மின்ஊழியர் பலி
மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த மின்ஊழியர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜெய்சங்கர். மின் வாரிய ஊழியரான இவர் சிப்காட் துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணி பார்த்துக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமான அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக மீட்கப்பட்ட ஜெய்சங்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததாக மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரகுநாதன், ஜெகநாதன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சஸ்பெண்டு செய்யப்பட்ட செயற்பொறியாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






