என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
லாரி டிரைவர் மர்ம சாவு
கந்தர்வகோட்டை அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கும்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (50).இவர் ஆலங்குடி உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மன்னார்குடியிலிருந்து ஆலங்குடிக்கு லாரியில் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு வந்தார்.
பின்னர் நள்ளிரவு ஒரு மணியளவில் கந்த்வகோட்டை கல்லாகோட்டை பேருந்து நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு படுத்து தூங்கினார்.
இன்று காலை மற்ற லாரிகளில் வந்த டிரைவர்கள் சென்று பார்த்தபோது குழந்தை சாமி படுத்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






