என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

    டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அந்தப் பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய செயலாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சொர்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வடிவேல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் புதிய கடை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்நாயகி முன்னிலையில் பேச்சுவார்த்¬தையில் ஈடுபட்டனர். அப்போது புதிய கடை உரிய பாதுகாப்போடு திறந்து செயல்படும் என அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. 

    இதையடுத்து போராட்டக்குழுவினர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். மேலும் புதிய கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே மற்றும் பழைய நீதிமன்றம் அருகே இயங்கும் 2 டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (9-ந் தேதி) பூட்டுபோடும் போராட்டம் நடத்தப்படும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×