என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வண்டலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கல்லூரி வேன் அடுத்தடுத்து மோதல்- 2 பேர் பலி

    வண்டலூர் அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலுர்:

    கேளம்பாக்கம் அருகே உள்ள மேலக்கோட்டைய னூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). தனியார் நிறுவன ஊழயர்.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வண்டலூர் அருகே உள்ள நல்லம்பாக்கம் கல்குவாரி சந்திப்பில் வந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் அடுத்தடுத்து மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானர். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (40) என்பவரும் பலியானார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கல்லூரி வேன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×